ராணி லட்சுமிபாய் வேடம் பூணும் 'கவர்ச்சி ராணி' சலோனி

தெலுங்கம்மாயி என்ற பெயரில் தயாராகும் படத்தில்தான் ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போட்டுக் கலக்கியுள்ளாராம்.
இப்படத்தில் சலோனிக்கு நிறைய சண்டைக் காட்சிகளையும் வைத்துள்ளனராம். இதற்காக தீவிர பயிற்சிகளில் குதித்துள்ள சலோனி இந்த வேடம் மூலம் தனது நடிப்புத் திறமையை பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறாராம்.
படத்தில் வரும் ஒரு காட்சியில் குதிரை மீது அமர்ந்தபடி கையில் வாளைச் சுழற்றிக் கொண்டு ஆவசேமாக கோஷமிட்டபடி வரும் காட்சியில், சலோனியின் நடிப்பைப் பார்த்து அனைவரும் மிரண்டு விட்டார்களாம்.
முதலில் குதிரை மீது சலோனி அமர பெரும் சிரமப்பட்டாராம். குதிரை சில முறை அவரை கீழே தள்ளி விட்டதாம். பின்னர் அதை பழக்கப்படுத்தி சலோனியிடம் நட்பு கொள்ள வைத்து பின்னர் காட்சிகளைப் படமாக்கினார்களாம்.
என்ன அதிரடி ராணியாகி விட்டீர்களே என்று சலோனியிடம் கேட்டால், ஒரு நடிகை கவர்ச்சிகரமான உடை அணிந்து, மரத்தை சுற்றி வந்து ஆடிப் பாடுவது மட்டுமே நடிப்பாக கருதக் கூடாது. இதுபோன்ற வேடங்கள்தான் உண்மையிலேயே ஒரு நடிகையின் திறமையை வெளிக்கொணர உதவும் என்றார்.


Click it and Unblock the Notifications











