ரஜினியுடன் மீண்டும் நடிக்க ஆசை: ஸ்ரேயா
ரஜினியின் 60வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை ஸ்ரேயா, மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயா தனது வாழ்த்துச் செய்தியில், ரஜினியிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இளைய தலைமுறை நடிகர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.
இப்போது இருப்பதுபோல் அவர் எப்போதும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்.
அதற்கான வாய்ப்பை அவர் தான் ஏற்படுத்தித் தர வேண்டும். அவருடன் மீண்டும் எத்தனை படங்களிலும் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
நயன்தாரா...
நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நான் பார்த்தவர்களிலேயே தலை சிறந்த மனிதர் ரஜினி தான். மூன்று படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தது எனக்குப் பெருமை.
தமிழ் சினிமாவில் எத்தனை இளம் ஹீரோக்கள் இருந்தாலும் எப்போதும் இளம் ஹீரோ ரஜினி தான். ரஜினி இருக்கும் தமிழ் சினிமாவில் நானும் இருப்பதில் பெருமைபடுகிறேன்.
பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ஆண்டவன் எல்லா ஆசிகளையும் வழங்கட்டும் என்று பிரார்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











