ஜெட் விமானிகள் ஸ்ட்ரைக்கால் அவதிப்பட்ட ஸ்ரேயா!

By Staff

Shriya Saran
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஸ்ட்ரைக்கால் பிறந்த நாளைக்கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாமல் போய்விட்டதாம் நடிகை ஸ்ரேயாவுக்கு.

இதென்ன புதுக்கதை... ஜெட் ஏர்வேஸில் ஸ்ரேயாவுக்கு ஏதாவது பங்கு உள்ளதோ என நினைக்க வேண்டாம்!

ஸ்ரேயாவின் விருப்பமான விமானம் ஜெட் ஏர்வேஸ்தானாம். வேறு விமானங்களில் டிக்கெட் போட்டுக் கொடுத்தால் ஷூட்டிங்குக்கே வரமாட்டாராம். ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீது அம்மணிக்கு அப்படியொரு காதல். அதிலும் குறிப்பாக பிஸினஸ் க்ளாஸில்தான் இவர் பயணிப்பாராம்.

நேற்று ஸ்ரேயாவுக்குப் பிறந்த நாள். பிறந்த நாளை முடித்துக் கொண்டு அவர் டொரண்டோவில் இன்று மாலை நடக்கும் தனது ஆங்கிலப் படமான வாட்ஸ் குக்கிங் ஸ்டெல்லா என்ற படத்தில் கலந்து கொள்ளவிருருந்தார். இதற்காக ஜெட் ஏர்வேஸில் இரண்டு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்திருந்தார்.

ஆனால் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் ஸ்ட்ரைக்கால் அவர் பயணம் செய்விருந்த பிளைட் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட அழுதே விட்டாராம் ஸ்ரேயா.

இதனால் பிறந்தநாளைக் கூட சரியாகக் கொண்டாட முடியாமல், ஜெட் ஏர்வேஸ்காரர்களுக்கும் ஸ்ட்ரைக் செய்யும் விமானிகளுக்கும் சாபம் விட்டபடியே, வேறு விமானத்தில் டிக்கெட் புக் செய்தாராம் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X