பிடிக்காத 'காளை' - பிடித்த 'சிலம்பு'!

சிம்புவின் காளையில், சங்கீதா நடித்த வேடத்தில் முதலில் சினேகாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த வேடம் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி கழன்று கொண்டு விட்டார் சினேகா.
இதையடுத்து சிம்பு குறித்து அவர் ஒன்றைக் கூற, பதிலுக்கு கடுப்பாக சிம்பு பதிலளிக்க சற்றே சர்ச்சை ஏற்பட்டு பின்னர் அடங்கியது.
இந்த நிலையில், இன்று சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடித்துள்ளார் சினேகா.
காளையில் மறுத்த நீங்கள், சிலம்பாட்டத்திற்கு மட்டும் எப்படி ஒத்துக் கொண்டீர்கள் என்று அவரிடம் யாராவது கேட்டால், காளை படத்தில் எனக்குக் கொடுத்த கேரக்டர் பிடிக்கவில்லை. அதனால் நடிக்கவில்லை.
ஆனால் சிலம்பாட்டம் கேரக்டர் பிடித்திருந்தது நடிக்கிறேன், தட்ஸ்ஆல் என்கிறார் சினேகா.
கூல்!
Comments


Click it and Unblock the Notifications