செருப்பில்லாம ஒருவாட்டி...! - ஸ்னேகாவுக்கு யோசனை

திருவண்ணாமலைக்கு செருப்புக் காலோடு கிரிவலம் போன பிரச்சினை இப்போதைக்கு அடங்குவதாகத் தெரியவில்லை என்பதால், என்ன செய்யலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடமும், இந்து மதப் பெரியவர்களிடமும் ஆலோசானை கேட்டாராம் அம்மணி.
அவர்களோ, "துணியோ ரப்பரோ... கால்ல எதுவும் போட்டுக்கிட்டு நடக்கக் கூடாது என்பது சாஸ்திரம். அதை மீறினதாலதான் இவ்வளவு பிரச்சினையும். அதனால் இன்னொருவாட்டி செருப்பில்லாம நடந்து வந்துடு. பண்ண தப்புக்கு பரிகாரம் தேடிக்கிட்ட மாதிரியும் இருக்கும்... இந்து மத அமைப்புகளைத் திருப்திப்படுத்தின மாதிரியும் இருக்கும்" என்று சொல்லிவிட்டார்களாம்.
இதுகூட நல்ல யோசனைதான் என்று சொன்ன ஸ்னேகா, மீண்டும் கிரிவலம் போக உகந்த நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எதுக்கும் நிறைய சாட்சிகளை வைத்துக் கொண்டே கிரிவலம் போங்க...
Comments


Click it and Unblock the Notifications