செவனு... ஓவியா!
களவாணி என்ற ஒரே படத்தில் பரபரப்பான நாயகிகள் வரிசைக்கு வந்துள்ளவர் ஓவியா. இப்போது செவனு என்ற புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அமரன் என்ற புதியவர் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தை ஜீவன் இயக்குகிறார்.
முதல் படத்தில் கிராமத்து ஓவியமாக வலம் வந்தவர், இந்தப் படத்தில் நகரத்து நாயகியாக நடிக்கிறார்.
கஞ்சா கருப்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
டி இமான் இசையமைக்க, பா விஜய் பாடல்கள் எழுதுகிறார். இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஓவியா கூறுகையில், "களவாணிக்குப் பிறகு மிகக் கவனத்துடன் தேர்வு செய்துள்ள படம் இது. கதையும் எனது பாத்திரமும் சிறப்பாக இருந்தது. பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார். வரும் புதன்கிழமை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் 'ஏவிஎம் ரஜினி பிள்ளையார் கோவிலில்' இந்தப் படம் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











