அக்ஷய் ஜோடியாக இந்தியில் அறிமுகமாகும் த்ரிஷா!

இப்போது அவரும் 'பாலிவுட் புகழ்' த்ரிஷாவாகிவிட்டார்.
ஆம்... அக்ஷய் குமார் ஜோடியாக ஒரு இந்திப் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார். அபியும் நானும் படத்தைப் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்ட அக்ஷய் உடனே த்ரிஷாவைக் கூப்பிட, இவரும் மும்பைக்குப் பறந்து போய் அக்ஷயுடன் டிஸ்கஷனை முடித்தார். இன்னும் மூன்று மாதங்களில் படப்பிடிப்பும் தொடங்கப்போகிறது!
இந்த வாய்ப்பின் மூல காரணம் ப்ரியதர்ஷன். இவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர். த்ரிஷாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய 'பெருமை'க்குரியவர் அல்லவா...
இந்த வாய்ப்பு குறித்து த்ரிஷா இப்படிக் கூறுகிறார்:
"நான் நிச்சயம் ஒரு நாள் இந்திப் படத்தில் நடிப்பேன் என்பது தெரியும். ஆனால் அதற்காக சான்ஸ் கேட்டு யார் பின்னாலும் போகவில்லை. லேசா லேசா படத்துக்குப் பிறகு வேறு படம் நடிக்கும் ஐடியாவிலேயே நான் இல்லை. அப்போது ப்ரியதர்ஷன்தான் என்னை சமாதானப்படுத்தி தொடர்ந்து படங்களை ஒப்புக் கொள்ள வைத்தார். இப்போது அவர் மூலமாகவே ஒரு உயர்ந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் என் கேரக்டர் என்னவென்று கூறமாட்டேன். ஆனால் நான்தான் முழு கதாநாயகி. அக்ஷய்க்கு என்னை ரொம்பப் பிடித்துவிட்டது... அதில் எனக்கு மிகுந்த பெருமை...", என்றார்.
இயக்குநர் பிரியதர்ஷன் கூறுகையில், "த்ரிஷா என்னுடைய தேர்வல்ல... அக்ஷயின் தேர்வு. எனக்கு வேண்டிய நடிகையையே அவர் தேர்வு செய்ததில் மகிழ்ச்சிதான். இந்தப் படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படம். எல்லாருக்கும் பிடித்த மாதிரி இருக்கும்...", என்றார்.
த்ரிஷா இந்திப் படம் நடிப்பதில் அவரது அம்மா உமா கிருஷ்ணனுக்குதான் ஏக சந்தோஷமாம். மும்பையின் அந்தஸ்தான பகுதியில் பெரிய பங்களாவாக வாங்குங்க என்று இப்போதே ஆர்டர் கொடுத்துவிட்டாராம்!


Click it and Unblock the Notifications











