பிரசாரமா..? மறுக்கும் திரிஷா!

By Staff

Trisha
காங்கிரஸ் கட்சிக்காக ஆந்திராவில் திரிஷா பிரசாரம் செய்யப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தியே, அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் மறுத்துள்ளார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்காக திரிஷா சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக ஆந்திராவே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து மீடியாக்களிலும் இதே செய்திதான்.

திரிஷா மட்டுமல்லாமல் ஷகீலாவும் பிரசாரத்திற்கு வரப் போகிறார் எனவும் செய்திகள் கிளம்பி ரசிகர்களை - மன்னிக்கவும், வாக்காளர்களை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால் திரிஷா பிரசாரம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை என்று அவரது அம்மா உமா மறுத்துள்ளார்.

இதுகுறித்து உமா கூறுகையில், திரிஷாவை பிரசாரம் செய்ய வருமாறு கேட்டது உண்மைதான். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார். ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் வர முடியாது என தெரிவித்து விட்டார்.

திரிஷா மறுத்ததற்குக் காரணம் அவருக்கு உள்ளூர் அரசியலும் தெரியாது, தேசிய அரசியலும் தெரியாது. எனவேதான் அவரால் பிரசாரத்தில் ஈடுபட மனம் வரவில்லை என்றார்.

அம்மா இப்படிச் சொல்கிறாரே என்று திரிஷாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, எனக்கு நடிப்பு மீது மட்டுமே ஆர்வம் உள்ளது. காரணம், எனக்கு அது மட்டுமே தெரியும் என்றார் திரிஷா.

திரிஷா தற்போது மதுரையில் முகாமிட்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X