ரீமேக் செய்யலாமே ஆசின் தரும் ஐடியா

நிரந்தரமாக இருந்து வந்த தமிழ் மார்க்கெட்டை பறி கொடுத்து விட்டு இந்திக்குப் போன ஆசின் தற்போது அங்கும் மார்க்கெட் சரிந்து போய்க் கிடப்பதால் தட்டுத் தடுமாறிய நிலையில் இருக்கிறாராம்.
தமிழில் நம்பர் ஒன் நாயகியாகஇருந்து வந்தார் ஆசின். அதேபோல தெலுங்கிலும் திருப்திகரமாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கஜினி இந்திப் படம் கிடைக்கவே ஒட்டுமொத்தமாக தென்னகத்திற்கு குட்பை சொல்லி விட்டு மும்பையில் வீடு வாங்கி செட்டிலான ஆசின், தற்போது இந்தி தன்னைக் கைவிட்டு விட்டதால் நொந்து போயுள்ளார்.
இதனால் மறுபடியும் விஜய் உதவியோடு காவலன் மூலமாக தமிழுக்கு வந்துள்ள அவர் இந்தியிலும் ஒரு கண் வைத்தபடிதான் உள்ளாராம். என்னதான் தமிழும், தெலுங்கும் தனக்கு மறுவாழ்வு கொடுத்தாலும் கூட இந்தியில் டப்பு ஜாஸ்தி என்பதால் அங்குதான் அவரது மனம் இன்னும் அலைபாய்ந்தபடி உள்ளதாம்.
இதனால் தமிழிலும், தெலுங்கிலும் பிரபலமாக ஓடிய படங்களை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்குமேஎன்று தனக்குத் தெரிந்த பாலிவுட் பிரபலங்களிடம் நைசாக பேசி ஆசையை ஏற்படுத்தி வருகிறாராம்.
அவர்கள் ஒத்துக் கொண்டு சரி என்றால் அதில் நாமே நாயகியாகி விடலாம் என்பதே ஆசின் போடும் திட்டமாம். இருந்தாலும் ஆசின் திட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளதா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











