லட்சுமி ராயின் கவர்ச்சி 'மங்காத்தா'!

நடிக்க வந்தது முதல் இப்போது வரை லட்சுமி ராயும், கவர்ச்சியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போலவே உலவி வருகிறார்கள்.
படம் முழுக்க அல்லது பெரும்பாலான காட்சிகளில் கவர்ச்சிகரமாக நடித்து வந்தும் கூட பெரிய இடத்தைப் பெற முடியாமல் இருப்பவரும் இவர்தான். இந்த நிலையில் அஜீத்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நினைத்து பூரிப்படைந்துள்ளாராம் லட்சுமி ராய்.
படத்தில் திரிஷாதான் நாயகி என்றாலும் கூட முக்கியமான ரோலில் வருகிறாராம் லட்சுமி ராய். இதற்காக வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்கிறார் லட்சுமி ராய்.
அதேசமயம், படத்தில் லட்சுமி ராய் சிறப்பான கவர்ச்சியைக் காட்டியும் நடித்துள்ளாராம். ரசிகர்களுக்கு இது அட்டகாசமான விருந்தாக அமையும் என்று கூறும் மங்காத்தா குழுவினர், இந்தப் படத்திற்குப் பின்னர் லட்சுமி ராய் தமிழ் சினிமாவில் சிறப்பாக கவனிக்கப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
படமும் கூட ஏக தடபுடலாக வளர்ந்து வருகிறதாம். அஜீத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா போட்டுள்ள அறிமுகப் பாடலைக் கேட்டு அஜீத்தே அசந்து விட்டாராம்.
இப்படி படம் இப்போதே கோலிவுட்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருவதால் படத்தை படு கவனமாக செதுக்கிக் கொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு.


Click it and Unblock the Notifications











