நமீதாவின் 'டான்ஸ் டான்ஸ்'!

நமீதாவின் மார்க்கெட் முன்பு போல கட்டுக்கோப்பாக இல்லை. முன்பெல்லாம் அவரைத் தேடி போன தயாரிப்பாளர்கள் நிறைய. இப்போதும் கூட போகத்தான் செய்கிறார்கள். ஆனால் நமீதாதான் வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஒப்புக் கொள்ளும் மன நிலையில் இல்லையாம்.
ஏனாம்...?
கவர்ச்சிகரமான ரோல்களாகவே நமீதாவைத் தேடிப் போகிறதாம். கவர்ச்சி, அதை விட மிகுந்த கவர்ச்சி என்றுதான் கேட்கிறார்களாம் வருகிறவர்கள் எல்லாம். எனக்கு நடிக்கவும் தெரியும், சேலை கட்டவும் தெரியும். அதற்கேற்ப ரோல்கள் கொடுங்கள் என்றால் கிளம்பிப் போய் விடுகிறார்களாம்.
இதனால் நமீதாவும் ஒரு முடிவுக்கு வந்து விட்டார். இதுவரை உடலைக் காட்டி நடித்தது போதும், இனிமேல் நடிப்புக்கே முக்கியத்துவம் தருவது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். இதனால்தான் அதிக படங்களில் நடிக்கஆர்வம் காட்டாமல் அமைதிகாக்கிறாராம்.
இந்த நிலையில் இன்னொரு திங்கிங்கும் அவர் மனசுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறதாம். அது நடனப் பள்ளி ஒன்றை ஆரம்பிப்பது. எப்படி, எப்போது, எங்கு என்பது குறித்து அவர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம். முடிந்தவுடன் முறைப்படி அறிவிப்பாராம்.
தனக்கு பரதநாட்டியம் நன்கு தெரியும் என்று நமீதாவே அடிக்கடி சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











