பிடிவாதம் கூடாது .. காஜல்

By Staff

Kajal Agarwal
நடிக்க வந்து விட்டால் இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்தால் வேலைக்கு ஆகாது என்கிறார் காஜல் அகர்வால்.

பழனி நாயகி காஜல் நடிக்க வந்த முதல் படம் பாரதிராஜாவின் பொம்மலாட்டம். ஆனால் அதை முந்திக் கொண்டு வந்த பழனி மூலம் ஹிட் ஆன காஜல், இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஹாட் நடிகையாக மாறியுள்ளார்.

தமிழிலும், தெலுங்கிலும் தன்னைத் தேடி நிறையப் படங்கள் வருவதால், செலக்ட் செய்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சினிமாவில் வெற்றி பெற ஒரு உபாயத்தைக் கூறுகிறார் காஜல். அதாவது கொள்கை வகுத்துக் கொண்டு அதன்படி நடந்தால் நிச்சயம் வெற்றி பெறலாமாம். அதற்காக வறட்டுப் பிடிவாதம் பிடிக்கக் கூடாது. அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என முரண்டு பிடிக்காமல் எப்படியும் நடிக்க தயாராக இருக்க வேண்டும் என்கிறார் காஜல்.

அதேசமயம், ஆபாசத்திற்கும், கவர்ச்சிக்கும் வித்தியாசம் உண்டு. கவர்ச்சியாக நடிக்கலாம் தப்பில்லை. ஆனால் ஆபாசம் மகா தப்பு. அதை நான் செய்ய மாட்டேன் என்கிறார் தெளிவாக.

காஜலுக்கு சேலைதான் நல்ல கவர்ச்சி உடையாம். மற்ற உடைகளை விட சேலையில்தான் கவர்ச்சி தெளிவாக இருக்கும் என்கிறார் காஜல்.

சரி பொம்மலாட்டம் அனுபவம் எப்படி என்றால், கல்லூரிக்குப் போனதைப் போன்ற அனுபவம் அது. பாரதிராஜா சார் கிரேட், நிறையக் கற்றுக் கொண்டேன் என்கிறார் சந்தோஷமாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X