என் பெயரில் மோசடி வெப்சைட்! - அசின் புலம்பல்

By Chakra

Asin
எனக்கே தெரியாமல் என்பெயரில் மோசடியாக ட்விட்டர் வெப்சைட் ஆரம்பித்து, எனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். இதனை நம்ப வேண்டாம், என்று கூறியுள்ளார் அசின்.

விஜய் ஜோடியாக அசின் நடிக்கும் காவலன் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அசின் பெயரில் இன்டர்நெட்டில் போலி வெப்சைட்கள் துவங்கி மோசடி நடக்கும் தகவல் அம்பலமாகியுள்ளது.

யாரோ சிலர் அசின் பெயரில் வெப்சைட்கள் துவக்கி, ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனராம். அதில் அசினின் கவர்ச்சிப் படங்களையும் போட்டு வைத்துள்ளனராம். மேலும் 'என்னுடன் லைவாக சாட் பண்ணுங்கள்' என்று அசினே கூறுவது போல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனராம். இதை நம்பி ஏராளமான ரசிகர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.

மேலும் ட்விட்டரிலும் அசின் பெயரில் தளம் ஒன்று இயங்கி வருகிறதாம். இதற்கு ஏராளமான பாலோயர்கள் குவிந்துள்ளனராம்.

இந்த மோசடி அசினுக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தார். ரசிகர்கள் போலியை உண்மை என்று நம்பி ஏமாற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:

டுவிட்டர் இணையதளத்தில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக சிலர் அதில் உருவாக்கியுள்ளனர். ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது நான் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் டுவிட்டரிலோ, ஆர்குட்டிலோ அல்லது வேறு எந்த வெப்சைட்டிலும் இல்லை. எதிர்காலத்தில் ஒருவேளை துவங்கலாம். ஆனால் இப்போது இல்லை. இணைய தளங்களில் எனது பெயரை யாரும் பயன்படுத்த வேண்டாம்..." என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X