சல்மானுடன் ஆசின் காதலா?

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த போதே, இந்திக்குப் போய்விட்டார் ஆசின். ஆமீர் கானுடன் கஜினி எனும் இந்திப் படத்தில் நடித்து முடித்த அவர் இப்போது சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் எனும் புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் நடிக்கும்போது, ஆசினுடன் சல்மான் நெருங்கிப் பழகுவதாகவும், இருவரும் அடிக்கடி பரிசுகள் பரிசுகள் பரிமாறிக் கொள்வதோடு, வெளியிடங்களில் சந்தித்துக் கொள்வதாகவும் மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணமுள்ளன.
இதனால் கோபமடைந்த சல்மானின் இப்போதைய காதலி கத்ரீனா கைப், ஆசினுடனான தொடர்பை உடனடியாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என சல்மானுக்கு நிபந்தனை விதித்திருப்பதாகவும், அதுவரை பேசமாட்டேன் என கூறியுள்ளதாகவும் முன்னணி இதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஆசின் கூறியுள்ளதாவது:
சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். அவர் ஒரு வித்தியாசமான மனிதர், மிகவும் கலகலப்பாகப் பழகக் கூடியவர்.
ஆனால் அவர் எனக்கு ஓணம் பண்டிகைக்குப் பரிசு கொடுத்ததாகவும், நான் அவருக்கு ரம்ஜானுக்குப் பரிசு கொடுத்ததாகவும் கூறுவது பொய்யானது. ஓணம் பண்டிகையன்று நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தோம். சந்திக்கவே இல்லை. ரம்ஜானின் போது நான் ஒரு படப்பிடிப்பிலிருந்தேன். இதில் இருவரும் சந்தித்து பரிசுகள் கொடுத்ததாக வரும் செய்திகள் பொய்தானே...
மேலும் எனக்கும் அவருக்கு எந்த தனிப்பட்ட உறவும் கிடையாது. அவர் எனக்கு மும்பையில் வீடு வாங்க உதவியதாகக் கூறப்படுவதும் தவறு என்று ஆசின் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











