'பொடி' வைக்கும் பிபாஷா!

பாலிவுட் கவர்ச்சிப் புயல் பிபாஷா பாசு, பார்க்கத்தான் கவர்ச்சி. பக்கத்தில் போனால் படு காரமாக இருக்கிறார். அதாவது கையில் வைத்திருக்கும் பையில் மிளாகய்ப் பொடியுடன்தான் இருக்கிறார் எந்த நேரமும்.
ஏன் இந்த கொலை வெறி என்று யாராவது கேட்டால், கொல்கத்தாவில் நான் முன்பு மாடலிங் செய்து வந்தபோது தனியாகத்தான் தங்கியிருந்தேன்.
நான் இருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு. அப்பகுதியில் சில ரவுடிப் பசங்க என்னிடம் வாலாட்ட முயன்றார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ள மிளகாய்ப் பொடி வைத்துக் கொள்ள ஆரம்பித்தேன். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவே இல்லை.
இருந்தாலும் இன்று வரை மிளகாய்ப் பொடியுடன்தான் இருக்கிறேன். இதுவரை ஒரு முறை கூட இதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பொடிக்கு காரணம் கூறுகிறார் பாசு.
பிபாஷா - ரியலி ஹாட்!
Comments


Click it and Unblock the Notifications