சாயா சிங்கின் 'இயக்கம்'!

By Staff

Chaya Singh
நடித்துக் களைத்துப் போய் விட்ட சாயாசிங், டைரக்ஷன் பக்கம் சாய்ந்து விட்டார். காந்தி நகர் என்று பெயரிடப்பட்டுள்ள கன்னடப் படம் ஒன்றை விரைவில் அவர் இயக்கப் போகிறாராம்.

எங்கேயோ போகப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட மன்மத ராணி சாயாசிங், எங்கேயும் போகாமல் தங்கிப் போய் விட்டார். திருடா திருடிக்குப் பிறகு அவர் பெரிய அளவில் பேசப்படவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த வல்லமை தாராயோ அட, நம்ம சாயாவா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரது நடிப்பு அப்படத்தில் பேசப்பட்டது.

வல்லமை தாராயோவுக்குப் பிறகும் கூட சாயாசிங்குக்கு தமிழ் சினிமாவால் பெரிய வல்லமை எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ளாராம் சாயாசிங். கன்னடத்தில் காந்தி நகர் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளாராம்.

வல்லமை தாராயோ படத்தின் இயக்குநர் மதுமிதாவை முன்மாதிரியாகக் கொண்டே டைரக்ஷன் முடிவுக்கு வந்தாராம் சாயாசிங்.

கன்னடத்தில் மட்டுமே இப்போதைக்கு இயக்கும் ஐடியா உள்ளதாம். தமிழுக்கு வர நிறைய அனுபவம் தேவை என்பதால் அப்புறம் பார்க்கலாம் என்கிறார் சாயா.

ஆக்ஷன் - கட் - சூப்பர்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X