எதற்கும் தயார் தேவி கிருபா..!

பயம் அறியான் படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார் தேவி கிருபா. பிறந்தது, பாதி வளர்ந்தது சென்னையில், வளர்ச்சி தொடர்ந்தது பாங்காக்கில்.
படிப்பு சரியாக வராததால், பாங்காக்குக்கு அனுப்பி விட்டனராம். அங்கு சினிமா டெக்னாலஜி படித்துள்ளார். பின்னர் அவ்வப்போது சென்னைக்கு வரும்போதெல்லாம் உறவினர்கள் சும்மா இல்லாமல், படு அழகா இருக்கிறியே, எதற்கு சினிமா பக்கம் போகக் கூடாது என்று தூண்டி விட்டு விட்டனராம்.
இதனால் தேவிக்குள் சினிமா ஆசை திகுதிகுவென வளர்ந்து இன்று நாயகி ரேஞ்சுக்கு வந்து கொண்டு வந்து விட்டுள்ளதாம்.
முதல் படமாக பயம் அறியான் படத்தில் கிஷோருக்கு ஜோடியாக நடிக்கிறார். சென்னையிலேயே தங்கியிருந்து நடிப்பாராம்.
கிளாமராக இருந்தாலும் சரி, வேறு எப்படி என்றாலும் சரி எனக்குக் கவலை இல்லை. எந்த மாதிரியான கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன். கிராக்கி பண்ண மாட்டேன் என்கிறார் தேவி கிருபா.
சினிமாவுக்குப் புதுசு என்று கூறும் தேவி கிருபா, சில தமிழ் டிவி தொடர்களில் தலையைக் காட்டியிருக்கிறார். ஆனாலும் ஏனோ அதுகுறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார் தேவி.


Click it and Unblock the Notifications











