காயத்ரி ரகுராம் கணவருக்கு கோர்ட் நோட்டீஸ்

கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக கூறி விவாகரத்து கோரியுள்ளார் காயத்ரி ரகுராம். இவரது கணவர் தீபக் சந்திரசேகர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து ரிட்டர்ன் ஆன காயத்ரி, தான் டான்ஸ் மாஸ்டராக செயல்படப் போவதாக அறிவித்தார். இந்த நிலையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம், தீபக் சந்திரசேகருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Comments


Click it and Unblock the Notifications