பாட சான்ஸ் குடுப்பீங்களா? சரண்யா மோகன்
நடிகைகள் சரண்யா மோகன், ரூபா மற்றும் மீரா நந்தன் ஆகியோருக்கு பாடகியாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூதுவிட்டு வருகின்றனர்.
இத்தனை நாட்களாக இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் 'நான்'. அதில் அவருக்கு ஜோடியாக 'திரு திரு துரு துரு' புகழ் நடிகை மீரா மஞ்சரி, வால்மிகி மூலம் அறிமுகமான மீரா நந்தன் மற்றும் நடிகை சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். நான் படத்திற்காக நாயகிகள் மூவரும் முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டுள்ளனர்.
புதிதாக பாடக் கற்றுக் கொண்டவுடன் தங்களது குரல் வளத்தை சோதிக்க முடிவு செய்துள்ளனர். நமக்குத் தான் பாடத் தெரியுமே, படத்தில் பாட்டு பாடினால் என்ன என்று மூவருக்கும் ஆசை வந்துள்ளது.
இதையடுத்து அம்மணிகள் பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூதுவிட்டு வருகின்றனர்.
இவர்களை பாடகியாக்கப்போவது யாரு?


Click it and Unblock the Notifications












