கோபிகா போய் க்ளினி!

By Staff

Gopika sister Glini
கோபிகா போய் விட்டார். அடுத்து அவரது தங்கை நடிக்க வருகிறார்.

அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் படு பத்திரமாக, பாந்தமாக நடித்து முடித்து கல்யாணமும் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் கோபிகா.

இப்போது அவரது தங்கை க்ளினி, அக்காவின் இடத்திற்கு வருகிறார். பாரீஸ் கார்னர் ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்தது போல அப்படியே கோபிகாவைப் போல இருக்கிறார் க்ளினி.

இப்போது அவர் மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். அங்கிருந்து அப்படியே தமிழுக்கு வந்து விடும் திட்டம் இருக்கிறதாம்.

க்ளினி, கேரள மாநிலம் காலடியில் உள்ள அங்கமாலி லிட்டில் பிளவர் மருத்துவமனையில், மருத்துவமனை நிர்வாகவியல் முதுகலை டிப்ளமோ படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாராம்.

நடிக்க வருவது குறித்து க்ளினி கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாகவே பல்வேறு மலையாள இயக்குநர்களிடமிருந்து எனக்கு வாய்ப்புகள் வந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் நான் படிப்பில் கவனம் செலுத்தி வந்தேன்.

இருப்பினும் தற்போது வந்துள்ள வாய்ப்பும், கதையும் எனக்குப் பிடித்து விட்டதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். தமிழிலும் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன் என்றார்.

இதற்கிடையே, கோபிகாவை தங்களது படத்தில் நடிக்க வைக்கு ஏவி.எம். உள்பட சில தயாரிப்பாளர்கள் முயன்று வருகின்றனராம். தற்போது கேரளாவில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளாராம் கோபிகா. தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை ஒப்புக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து சீரியஸாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அம்பிகா, ராதா போல இருவரும் சேர்ந்து நடிக்கலாமே..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X