மலையாளத்தை மறுத்த கார்த்திகா

By Staff

Karthika
கார்த்திகா தன்னைத் தேடி வந்த மலையாளப் பட வாய்ப்பை மறுத்து விட்டாரம். தமிழிலேயே கை நிறைய வாய்ப்புகள் இருப்பதால் இப்போதைக்கு எந்தப் பக்கமும் போக வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

தூத்துக்குடி படம் மூலம் தமிழில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த கார்த்திகா ஆரம்பத்தில் சற்று தடுமாறி இப்போது ஸ்டெடியாகி வருகிறார்.

தூத்துக்குடியில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஹரிகுமாருடன் இணைந்து மதுரை சம்பவம் படத்தில் 2வது முறையாக ஜோடி போட்டுள்ளார். இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம்.

அதேபோல 365 காதல் கடிதங்கள், வைதேகி, அலையோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.

ஐவர் பட்டாளம், தைரியம் என இரு படங்களின் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறதாம். இதுவிர சில புதிய படங்கள் குறித்தும் பேசி வருகிறாராம்.

இப்படி தமிழிலில் பிசியாகி வரும் கார்த்திகாவைத் தேடி சில மலையாளப் பட வாய்ப்புகள் வந்தனவாம். இருந்தாலும் அவற்றை வேண்டாம் என்று கூறி விட்டாராம் கார்த்திகா.

தமிழில் மட்டும் இப்போது கவனம் செலுத்தலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் கார்த்திகா. கூடவே இன்னொரு முக்கிய விஷயத்திலும் படு தீவிரமாக இருக்கிறார் - அது இந்தாண்டுக்குள் புது வீடு வாங்கி குடியேறி விடுவது என்பதுதானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X