உலகின் செக்ஸியான பெண்ணாக காத்ரீனா மீண்டும் தேர்வு

By Sudha

Katrina Kaif
உலகின் மிகவும் செக்ஸியான பெண்ணாக நடிகை காத்ரீனா கைப் மீண்டும் தேர்வாகியுள்ளார். இவ்வாறு அவர் தேர்வாவது இது தொடர்ச்சியாக 3வது முறையாகும்.

ஹாலிவுட்டில் கலக்கி வரும் ப்ரீடா பின்டோ, பிரியங்கா சோப்ராவை அவர் போட்டியில் எதிர்கொண்டு பின் தள்ளியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஐ என்ற பத்திரிக்கையின் கருத்துக் கணிப்பில்தான் காத்ரீனாவுக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.

உலகின் ஹாட்டான பெண்கள் பட்டியலை 'ஈஸ்டர்ன் ஐ' வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ச்சியாக 3வது முறையாக காத்ரீனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதுகுறித்து காத்ரீனா கூறுகையில், ஈஸ்டர்ன் ஐ பத்திரிக்கையின் உலகின் செக்ஸியான பெண்கள் பட்டியலில் மூன்றாவது முறையாக நான் முதலிடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு இங்கிலாந்து மிகவும் விசேஷமான ஒரு இடமாகும். அந்த நாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிக்கை என்னை செக்ஸியான பெண்ணாக தேர்வு செய்திருப்பது கூடுதல் விசேஷமாகும்.

எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார்.

சல்மான் கானுடன் மிகவும் நெருக்கமாக இருந்த காத்ரீனா இப்போது அதை துண்டித்து விட்டதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதையடுத்து அவர் பிற நடிகர்களுடன் அதிகம் ஜோடி சேர ஆரம்பித்துள்ளார்.

இப்பட்டியலில் பிரியங்கா சோப்ரா 2வது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானிய நடிகையான மேவிஷ் ஹயாத் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். நம்ம ஊர் கரீனா கபூர் 7வது இடம் பிடித்துள்ளார்.

பிபாஷா பாசு 3வது இடத்தையும், ப்ரீடா பின்டோ 4வது இடத்தையும் பிடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பூபதியைப் பிடித்த லாரா தத்தாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

ஹாங்காங்கில் பிறந்தவரான காத்ரீனா கைப், காஷ்மீரி தந்தைக்கும், இங்கிலாந்து தாய்க்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது குழந்தைப் பருவத்தை ஹவாயிலும், பின்னர் இங்கிலாந்திலும் கழித்தவர் அவர்.

லண்டனில் நகைக் கடை விளம்பரத்திற்காக நடித்துக் கொண்டிருந்த போது அவரைப் பார்த்த இயக்குநர் கைசாத் குஸ்தாத், பாலிவுட்டுக்கு அழைத்து வந்து பூம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X