ரஜினியை 'இயக்கிய' மம்தா!!

வேறு ஒன்றுமில்லை... ரஜினியின் அடுத்த படமான குசேலனில் ரஜினியை இயக்கும் டைரக்டராக நடித்துள்ளாராம் மம்தா.
சில காட்சிகளில் ரஜினிக்கு நடிப்பு சொல்லித் தருவதுபோல் நடித்துள்ளாராம் மம்தா. அந்த சாக்கில் அப்படியே ஒரு கனவுப் பாடலில் சூப்பர்ஸ்டாருடன் ஒரு சூப்பர் ஆட்டமும் போட்டுள்ளாராம் அம்மணி.
குசேலனின் தமிழ் - தெலுங்கு இருமொழிப் பதிப்புகளிலும் மம்தாவே இந்த கேரக்டரைச் செய்துள்ளார். இது தனக்கு தமிழகம் - ஆந்திராவில் பெரிய ப்ரேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரிடமும் இதைப் பற்றியே ஓயாமல் பேசிவருகிறார்.
சிவப்பதிகாரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான மம்தா, அந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கில் பின்னணிப் பாடகியாகிவிட்டார்.
இப்போது குசேலன் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதைத் தவிர மாதவனின் குரு என் ஆளு உள்பட இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
டைரக்டரா நடிக்கிறதெல்லாம் சரிதான். ஆனால் ரஜினியையே ஆட்டி வெச்சிட்டேன் என்று எல்லார்கிட்டயும் சொல்ற மாதிரி ரஜினி ரசிகர்கள்கிட்டயும் சொல்லிடப் போறீங்க...


Click it and Unblock the Notifications











