நயன் மீது பாயும் மீனா!!

இதோ அப்படி ஒரு மேட்டர்...
நடிகை மீனா கடைசியாக தமிழில் நடித்த படம் பார்த்திபனுடைய இவன். அதிலும்கூட முதல் ஹீரோயின் மறைந்த செளந்தர்யா. இவருக்கு இரண்டாவது இடம்தான்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது அந்தப் படம் வெளியாகி. அதன்பிறகு மீனாவை தமிழ் திரையுலகம் திரும்பிப் பார்க்கவில்லை. அவரும் தன் இன்னிங்ஸ் முடிந்துவிட்டதை ஒப்புக் கொண்டு டிவி சீரியலிலும் சில மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தப் போய்விட்டார்.
இதற்கிடையே ரஜினியின் குசேலனில் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க சிம்ரன் கேட்ட சம்பளத்தைப் பார்த்து மிரண்டு போன வாசு, மீனாவை ஒப்பந்தம் செய்தார். படமும் வெளியாகிவிட்டது.
இப்போது படத்தின் இயக்குநரைக் குறைசொல்ல ஆரம்பித்துவிட்டார் அம்மணி. தன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைய எடுக்கப்பட்டதாகவும், நயனதாராவுக்காக அவற்றை இயக்குநர் வாசு குறைத்துவிட்டது, தன்னை அவமானப்படுத்துவது போல் உள்ளதாகவும் பேட்டியளித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தின் கதாநாயகி நான்தான். ஆனால் டைட்டிலில் என்பெயரை முதலில் போடாமல் நயன்தாரா பெயரைப் போட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நான். என்னைவிடப் பெரிய நடிகையல்ல நயனதாரா. எனக்கு அடுத்துதான்.
குசேலனில் என்னை இயக்குநர் வாசு நடத்திய விதம் சரியில்லை. அதற்காக நான் ரஜினியைக் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். அவர் நல்ல மனிதர். அன்புள்ள ரஜினிகாந்திலிருந்து இன்று வரை அவர் ஒரே மாதிரிதான் இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
திரும்பவும் முதல் பாராவின் முதல் வரியைப் படித்துக் கொள்ளுங்கள்!


Click it and Unblock the Notifications











