விஜயகாந்த்துக்கு மீரா ஜாஸ்மின்

விஜயகாந்த்தும், விக்ரமனும் இணைந்து கொடுத்த வானத்தைப் போல இமாலய வெற்றி பெற்ற குடும்பச் சித்திரம். விஜயகாந்த்தின் இமேஜை பெரிய அளவில் பூஸ்ட் செய்ய உதவிய படம் அது.
அதன் பிறகு விக்ரமனும், விஜயகாந்த்தும் இணையவில்லை. இந்த நிலையில் இருவரும் மீண்டும் கை கோர்க்கவுள்ளனர். இந்தப் படத்தின் கதையும், குடும்ப சென்டிமென்ட் நிறைந்த கதைதான்.
இப்படத்தில் விஜயகாந்த்துக்கு நல்ல பாந்தமான ஹீரோயினாக தேடி வந்தார் விக்ரமன். தற்போது அவரது தேடலில் கிடைத்திருக்கிறார் மீரா ஜாஸ்மின்.
படத்தின் கதையைக் கேட்ட மீரா ஜாஸ்மின், நடிக்க முடிவுசெய்து சம்மதம் தெரிவித்தாராம்.
விஜயகாந்த் படத்தில் மீரா ஜாஸ்மின் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். இது விஜயகாந்த் படமாக இருந்தாலும், கதையில் மீரா ஜாஸ்மின் கேரக்டருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications