கோயில்-தடுத்து வைத்துள்ள த்ரிஷா

ஹைதராபாத்தில் படப்பிடிப்புக்கிடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்த த்ரிஷா, இதுபற்றி கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் எனக்கு ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 1000 மன்றங்கள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களுடன் பேசுவேன்.
அவர்களுக்கு சமூக சிந்தனை அதிகம். ஏராளமான நல்ல காரியங்கள் செய்து வருகிறார்கள்.
இந்தப் பணிகள் தொடர வேண்டும் என்பதற்காகவே அவர்களை ஊக்குவித்து வருகிறேன்.
சமீபத்தில் எனது ரசிகர்கள் என்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்தனர். எனக்கு கோவில் கட்டப் போவதாகவும் அதற்கு அனுமதி வேண்டும் என்றும் கேட்டனர்.
எனக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது. நான் ஒரு நடிகை. எனக்கு கோயில் எதற்கு. அதெல்லாம் தெய்வங்களுக்கு மட்டும்தான் என்று கூறி அவர்களைத் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளேன்.
நல்ல பணிகளைச் செய்து வருவதால் இன்னும் ஏராளமான மன்றங்களைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளேன், என்றார் த்ரிஷா.
இந்திப் படத்தில வேற நடிக்கிறார்... இன்னும் என்னவெல்லாம் குண்டு வைத்திருக்கிறாரோ!


Click it and Unblock the Notifications











