1977 - ஒரு கவர்ச்சிப் போட்டி!

சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் படம் 1977. இதை தனது கனவுப் படமாக கூறியுள்ளார் சரத்குமார். அப்பா, தந்தை வேடங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். அவர் ஏற்கனவே அப்பா, மகன் வேடங்களில் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் இப்படமும் மெகா ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் சுப்ரீம் ஸ்டார் தரப்பு உள்ளது.
படத்தில் சரத்துக்கு இரு ஜோடிகள். ஒருவர் நமீதா, இன்னொருவர் மும்பை அழகி பர்ஸானா.
நமீதா இப்பத்தில் வக்கீலாக வருகிறாராம். இதற்காக சிறப்பான பயிற்சிகளும் எடுத்துள்ளாராம் நமீதா.
இதுதவரி படத்தில் நமீதாவுக்கும், பர்ஸானாவுக்கும் இடையே கவர்ச்சிப் போட்டி படு களேபரமாக இருக்கிறதாம். போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டியுள்ளனராம் இருவரும். இருப்பினும் பர்ஸானாவின் பக்கம் சற்றே வலு கூடுதலாக இருப்பதாக யூனிட்டிலிருந்து செய்தி கசிந்துள்ளது.
படத்தில் கிளாமர் மட்டும்தான் இருக்குமோ என்று சந்தேகப்பட்டு விட வேண்டாம் அருமையான கதையும் அட்டகாசமாக இருக்கிறதாம். படம் குறித்து சரத்குமார் ஏக நம்பிக்கையுடன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











