நவ்யா வேணாம்... சின்னப் பொண்ணா வேணும்!

சர்ச்சை நாயகன் சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்ட நவ்யா நாயர், மோசர் பேர் தயாரிக்கும் அவள் பெயர் தமிழரசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்தப் படத்தின் நாயகனாக சமீபத்தில்தான் சுப்பிரமணியபுரம் பட நாயகன் ஜெய்யை ஒப்பந்தம் செய்தார்கள். தனக்கு ஹீரோயின் யாரென்று கேட்டதும், சற்று யோசித்த ஜெய், நாயகியை மாற்றினால் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே படத்தின் இயக்குநர் மீரா கதிரவனுக்கும் நவ்யாவுக்கும் சரிப்பட்டு வரவில்லையாம். ஞ
ஹீரோவுக்கும் பிடிக்கவில்லை. இயக்குநருக்கும் பிடிக்கவில்லை.
பிறகென்ன... நவ்யாவை எந்தப் பிரச்சினையுமின்றி சுமுகமாகக் கழட்டிவிட்டுவிட்டார்களாம்.
ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கும் இப்படத்துக்கு புது நாயகியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
படமே துவங்கல... அதுக்குள்ள சண்டையா!


Click it and Unblock the Notifications











