'நம்பர் 1 பிளாப் ஸ்டார்'-நயனதாரா, ஷ்ரியா போட்டி!
நம்பர் 1 யார் என்ற போட்டி மாறிப் போய் இப்போது நம்பர் 1 பிளாப் ஸ்டார் யார் என்ற போட்டி தமிழ் சினிமாவில் கடுமையாகியுள்ளது. இந்த உட்டாலக்கடி போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பவர்கள் நயனதாராவும், ஷ்ரியாவும்தான்.
யார் படம் அதிகம் ஓடாமல் இருக்கிறது என்பதற்காக போட்டியிடுகிறார்களோ என சந்தேகம் ஏற்படும் அளவுக்கு தொடர்ந்து பிளாப் படங்களைக் கொடுத்து வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நயனதாராவின் நிலைமைதான் ரொம்ப மோசம்.
ரஜினியுடன் நடித்தால் போதுமா, திறமை ஏதாவது இருக்க வேண்டாமா என்று இவர்களைப் பார்த்து கேட்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு இவர்களின் நடிப்புக்கு அபரிமிதமான 'வரவேற்பு' காணப்படுகிறது.
இருவரும் விஜய், விஷால் என முன்னணி இளம் ஹீரோக்களுடன் நடித்த படங்கள் சுத்தமாக போணியாகவில்லை.
கந்தசாமி படத்தில் கிட்டத்தட்ட ஷ்ரியாவை உரித்த கோழியாக காட்டியிருந்தனர். பார்த்து ரசிப்பதற்குப் பதில் வாந்தி எடுக்காத குறையாக முகத்தைச் சுளித்தபடிதான் ஷ்ரியாவை இந்தப் படத்தில் பார்த்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் அவரது அடுத்த படமான ஜக்குபாய், இதுவரை பேசப்பட்டதாகவே தெரியவில்லை. இதனால் ஷ்ரியா திகிலடைந்து போயிருக்கிறார்.
இவரது நிலைமை இப்படியென்றால் நயன்தாராவின் நிலைமை இன்னும் மோசம். ஆதவன் படம் வெளிவந்த பின்னர்தான் இவரது நட்சத்திர வானில் சூரியனின் பிரகாசம் தெரியுமா என்பதைக் கூற முடியும். இதற்கு இடையில் ரமலத்தின் கணவரான பிரபுதேவாவுடனான காதல் வேறு சைடில் கிளம்பி நயனதாராவின் பெயரை ஏகமாகவே ரிப்பேர் செய்து வைத்து விட்டது. அடுத்த பெண்ணின் கணவருக்கு இப்படியா ஆசைப்படுவது என்று பெண்கள் முகம் சுளித்து வருகிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி இருவரது மார்க்கெட் ரேட்டும் சற்று கலவரமாகவே காணப்படுவதாக கோலிவுட்டில் சொல்லிக் கொள்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











