காத்திருக்கும் பூஜா!

By Staff

Naan kadavul
நான் கடவுள் படத்தின் ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறாராம் பூஜா.

பாலாவின் மிரட்டல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நான் கடவுள் படத்திற்கு கோலிவுட்டில் மட்டுமல்லாது தமிழ் திரைப்பட ரசிகர்களிடையேயும் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வித்தியாசமான திரைக்கதையுடன், இளையராஜாவின் விறுவிறுப்பான இசையுடன், ஆர்யா - பூஜாவின் மிரட்டல்நடிப்பில் படம் படு பிரமாதமாக வந்திருப்பதாக இப்போதே திரையுலகினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

இதனால் நான் கடவுள் பட ரிலீஸ் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள் நிறைவுக் கட்டத்ைத எட்டியுள்ளன.

இந்த நிலையில் படத்தின் நாயகியான பூஜாதான் பெரும் டென்ஷனாக இருக்கிறார். இப்படம் தனக்கு பெரிய பிரேக் தரும் என்ற எதிர்பார்ப்பால்தான் இந்த டென்ஷன்.

நான் கடவுள் படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட, படப்பிடிப்பின்போது பாலாவின் வாயால் கிடைத்த பாராட்டைத்தான்
பெரிதாக நினைக்கிறாராம். கட்டாயம் விருது நிச்சயம் என்றும் பாலா கூறி வைத்திருக்கிறாராம் பூஜாவிடம்.

மேலும், படம் ரிலீஸாகும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்க வேண்டாம். அது உங்களது கேரக்டரை பாதிக்கலாம் என்றும் பூஜாவிடம் பாலா கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் புதிய படம் எதிலும் நடிக்காமல் கடவுளுக்காக காத்திருக்கிறாராம் பூஜா.

பூஜாவுக்கு கடவுள் அருள் புரியட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X