ராதா மகள் கார்த்திகாவும் இப்போ ஹீரோயின்!!

திருமணத்துக்குப் பின் மும்பையில் செட்டிலாகிவிட்ட ராதா, மீண்டும் சினிமா பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்தார்.
இவருக்கு மூன்று குழந்தைகள். இவர்களில் மூத்த மகள் பெயர் கார்த்திகா.
இவரை தமிழில் நடிகையாக்க பல்வேறு இயக்குனர்கள் முயன்றனர். ஆனால், அப்போதெல்லாம் ராதா உறுதியாக மறுத்து வந்தார். சமீபத்தில் சென்னையில் ராதா தன் மகளுடன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தினார்.
இப்போது மகளை கதாநாயகாக்க ஒப்புக் கொண்டுள்ளார் ராதா.
தெலுங்கில், நாகார்ஜுனா மகன் நாகா சைதன்யா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. தமிழிலும் தன் மகள் நடிப்பார் என ராதா தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications