கழுத்துக்குக் கீழே காதலன் பெயர்... பச்சைக் குத்திய ரம்யா!

சர்ச்சைக்குரிய நடிகை எனப் பெயரெடுத்தவர் திவ்யா. சமீபத்தில்தான் இவரை மையம் கொண்டு ஒரு பெரும் புயலே கன்னட திரையுலகில் எழுந்து அடங்கியது.
இப்போது, ரம்யாவின் காதல் விவகாரங்கள் பத்திரிகைகளில் செய்தியாக வரத் தொடங்கியுள்ளன.
ரபேல் என்பவரைக் காதலிக்கிறாராம் ரம்யா. ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் இந்த ரபேல். இருவரும் சுற்றாத ஊரில்லை. ஆனாலும் தனது இந்தக் காதலை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்தார் ரம்யா.
சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். அப்போதுதான் காதலன் ரபேலின் பெயரை தன்னுடைய கழுத்துக்கு கீழே பச்சையாக அவர் குத்திக் கொண்டுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எனது காதலன் ரபேலின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளது உண்மைதான். மிகவும் வித்யாசமான முறையில் பழமையான மொழிகளில் ஒன்றான ஹிப்ரூ மொழியில் அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டுள்ளேன். ரபேல் என்றால் புனிதம் என்று அர்த்தம். இந்த விஷயம் தெரிந்ததும் நெகிழ்ந்து போனார் ரபேல்," என்றார்.


Click it and Unblock the Notifications











