மண்டோதரி...ரீமா சென்னும் மறுப்பு!

By Staff

Reema Sen
மணிரத்னம் படமா... நடிக்க நான் நீ எனப் போட்டி போடுவார்கள்... எப்படிப்பட்ட கமிட்மெண்டாக இருந்தாலும் கேன்சல் செய்துவிட்டு மணிரத்னத்துக்கு கால்ஷீட் தருவார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போதோ ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தப்பிக்கவே விரும்புகிறார்கள் நடிகைகள்.

ராவணன் படத்தில் ஏற்கெநவே முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், அவர் கணவர் அபிஷேக் பச்சன், விக்ரம், ப்ரியா மணி எனபல முன்னணி கலைஞர்கள் நடித்து வருகின்றனர். இப்போது மண்டோதரி வேடத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகை தேவை. இதுவரை நான்கு நடிகைகளிடம் கேட்டுப் பார்த்தும் ஒருவரும் நடிக்க முன்வரவில்லையாம்.

இது மணிரத்னத்துக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளதாம்.

முதலில் அனுஷ்காவை அணுகியிருக்கிறார்கள்... அவரோ அருந்ததி கொடுத்த மகா வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார். ராவண் படத்தில் மூன்றாவது நாயகி என்றதும் முகத்தைச் சுளித்தபடி மறுத்து விட்டாராம். பின்னர் ஸ்ரேயாவிடம் கேட்டார்களாம். அவரிடமிருந்தும் அதே பதில்.

சில தினங்களுக்கு முன் நயன்தாராவை அணுக, அவர் ஆதவனைக் காரணம் காட்டி மறுத்துள்ளார். அடுத்து இப்போது ரீமா சென்னைக் கேட்டார்களாம். அவரோ, புதிய படம் ஒன்றில் நடிப்பதாகக் கூறிவிட்டாராம். மேலும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் வேறு இன்னும் இழுத்துக் கொண்டிருப்பதால் நடிப்பது சாத்தியமில்லை என்றாராம் மணிரத்னம் சார்பில் தன்னைப் பார்க்க வந்த சுகாசினியிடம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X