'நான்' ருக்மணி!

பொம்மலாட்டம் மூலம் தமிழுக்கு வந்தவர் ருக்மணி. முதல் படத்திலேயே தனது முக வசீகரத்தால் அனைவரையும் ஈர்த்த ருக்மணி நடிப்பிலும் பலரது பாராட்டைப் பெற்றார்.
இதையடுத்து அவர் நடிப்பில் ஆனந்த தாண்டவம் வெளியாகியுள்ளது. அவரது வித்தியாசமான நடிப்பு பலரையும் கவர்ந்து விட்டதால் புதிய பட வாய்ப்புகள் ருக்கைத் தேடி ஓடி வருகின்றனவாம்.
தற்போது ருக்மணி, ஆனந்த தாண்டவம் நாயகன் சித்தார்த்துடன் தனி ஜோடியாக இணைந்து நான் என்ற படத்தில் நடிக்கிறார். ஜீவா சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஜீவாவின் முன்னாள் உதவியாளர் ஆவார்.
ஆனந்த தாண்டவம் படத்தின் கேமராமேனும் இவர்தான். இப்போது இயக்குநராகிறார். ஆனந்த தாண்டவத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனே நான் படத்தையும் தயாரிக்கிறார்.
இப்படம் ஒரு திரில்லர் ஆகும். விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.
Comments


Click it and Unblock the Notifications