'சிக்' குஷ்பு - 'நக்கல்' சத்யராஜ்!

By Staff

Kushboo
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முரளி நடித்துள்ள எங்க ராசி நல்ல ராசி பட ஆடியோ வெளியீட்டு விழாவில், ஜீன்ஸ், டீ சர்ட்டில் சின்னப் புள்ளை தோற்றத்தில் சிக்கென வந்திருந்தார் குஷ்பு. விழாவில் பேசிய சத்யராஜ், இப்போதெல்லாம் குஷ்பு கால் மேல் கால் போடுவதில்லை என்று பேசி கூட்டத்தில் கலகலப்பூட்டினார்.

ரொம்ப காலமாக இளைஞராகவும், மாணவராகவும் நடித்துக் கொண்டிருந்தவர் முரளி. ஆனால் நிஜமான இளைஞர்களும், மாணவர்களும் ஹீரோக்களாக வந்து விட்டதால் முரளிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. தேக்கமடைந்திருந்த அவரது மார்க்கெட்டை தூக்கி நிமிர்த்தும் வகையில் கிடைத்த வாய்ப்புதான் எங்க ராசி நல்ல ராசி.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சத்யராஜ் முதல் கேசட்டை வெளியிட, குஷ்பு பெற்றுக் கொண்டார். வழக்கமாக மங்களகரமாக புடவை அல்லது சுடிதார் போன்ற உடைகளில் வரும் குஷ்பு, இந்த நிகழ்ச்சிக்கு சிக்கென்ற ஜீன்ஸ் மற்றும் டீசர்ட்டில் வந்திருந்தார்.

வழக்கம் போல தமாஷாகாவும், லொள்ளாகவும், நக்கலாகவும் பேசினார் சத்யராஜ். பேச்சுவாக்கில் முரளியை குண்டக்க மண்டக்க வாரினார். களத்தூர் கண்ணம்மா படத்தை இப்போது எடுத்தால் அதில் குட்டி கமல் வேடத்தில் முரளியை நடிக்க வைக்கலாம். அம்மாவும் நீயே அப்பாவும் நீயே பாட்டுக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று வாரினார்.

பிறகு குஷ்பு பக்கம் வந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த கஸ்தூரி ராஜாவைக் குறிப்பிட்டு வந்தது முதலே பார்க்கிறேன், குஷ்பு பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா. அப்போதுதான் தனது படம் பத்திரிக்கையில் வரும் என்று நினைக்கிறார் போலும். குஷ்பு மீது உள்ள வழக்கில் அவரையும் சேர்த்து விடப் போகிறார்கள் என்றார் சத்யராஜ்.

அத்தோடு நில்லாமல், குஷ்பு இப்போதெல்லாம் கால் மேல் கால் போடுவதில்லை என்றும் தமாஷாக பேசினார். அப்போது குறுக்கிட்ட குஷ்பு, இங்கு விளக்கு இல்லை என்று குரல் விட்டார்.

நல்ல தமாஷ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X