ஒரு ஹீரோ; 10 ஹீரோயின்கள்!

மலையாளத்தில் அவர் இயக்கி வெற்றிகரமாக ஓடிய சிந்தாமணி கொல கேஸ் படத்தினை 'எல்லாம் அவன் செயல்' எனும் பெயரில் ரீமேக் செய்கிறார் ஷாஜி.
இந்தப் படத்தின் நாயகனாக ஆர்கே நடிக்கிறார். நாயகிகள் ஒருவர் இருவரல்ல... பத்துப் பேர்.
இதுகுறித்து ஷாஜி கைலாஷ் கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நான் இயக்கும் படம் எல்லாம் அவன் செயல். மலையாளத்தில் இயக்கிய சிந்தாமணி கொலை கேஸ்தான் இந்தப் படம். பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் அப்படியே தருகிறேன்.
நாயகி பாமா ஒரு கல்லூரி மாணவி. அவரை அடாவடி கும்பலைச் சேர்ந்த இளம்பெண்கள் சிலர் ராகிங் செய்கின்றனர். அதன் பின் பாமா மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்.
இந்த வழக்கை ஹீரோ ஆர்.கே. விசாரிக்கிறார். ரவுடி கும்பலை சேர்ந்த ஒன்பது பெண்களையும் சட்டத்துக்கு முன் நிறுத்துகிறார். அதன்பின் கிளைமாக்ஸில் நடக்கும் திடீர் திருப்பம்தான் படத்தின் ஸ்பெஷல். பாமாவை தவிர படத்தில் வரும் கேங்ஸ்டர் பெண்கள் 9 பேரும் படம் பார்க்கும்போது வில்லிகள் மாதிரி தெரியும். ஆனால் வில்லிகள் அல்ல. அவர்களும் படத்தின் ஹீரோயின்கள்தான்.
அவர்களின் வேடம் சற்று எதிர்மறையாய் அமைக்கப்பட்டிருக்கும். பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. இம் மாதம் 28-ம் தேதி ரிலீசாகிறது..." என்றார் ஷாஜி கைலாஷ்.
இந்தப் படத்தின் மலையாளப் பதிப்பில் சுரேஷ் கோபி நடித்திருந்தார். தமிழில் அந்த மாதிரி பவர்ஃபுல் ஹீரோவைப் போடாதது ஏன்?
"அந்தப் பாத்திரத்தை பிரபல நடிகர்தான் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவுமில்லை. யார் செய்தாலும் எடுபடும். சற்று வில்லத்தனம் கொண்ட இந்தப் பாத்திரத்தில் இமேஜ் இல்லாத ஒரு நடிகர் தேவைப்பட்டார். அதனால்தான் ஆர்.கே.வை நடிக்க வைத்தேன். சிறப்பாகச் செய்திருக்கிறார்.
மலையாளத்தில் என்ன படம் செய்கிறீர்கள்?
இப்போது மோகன்லால் நடிப்பில் ரெட் சில்லிஸ் மலையாளப் படத்தை இயக்கி வருகிறேன். இதில் வெளிநாட்டு தொழிலதிபராக மோகன்லால் நடிக்கிறார். இதுவும் த்ரில்லர்தான். இன்னும் ஒரு படத்துக்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருகின்றன, என்கிறார் ஷாஜி கைலாஷ்.


Click it and Unblock the Notifications











