ஷெபாலி ஷாவின் 'வேகம்'!

By Staff

Shefali
பாலிவுட் மற்றும் டிவி நடிகையான ஷெஃபாலி ஷா, சமீபத்தில் அவரது கணவர் கொடுத்த பார்ட்டியின்போது மப்பு தலைக்கேறி, தாறுமாறாக நடந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

ரங்கீலா, சத்யா, வக்த், மொஹபதீன், காந்தி மை பாதர், மான்சூன் வெட்டிங், பிளாக் அண்ட் ஒயிட் உள்ளிட்ட படங்களிலும், பல டிவி தொடர்களிலும் நடித்திருப்பவர் ஷெஃபாலி ஷா.

காந்தி மை பாதர் படத்தில் கஸ்தூரிபாய் காந்தியாக நடித்திருந்தார் ஷெஃபாலி.

சமீபத்தில் இவரது கணவர் இயக்குநர் விபுல் ஷா ஒரு பார்ட்டி அளித்தார். அதில் காத்ரீனா கைப், டிவிங்கிள் கண்ணா, கிரண் கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பார்ட்டிக்கு வந்தவர்களை விட ஷெஃபாலிதான் படு போதையுடன் காணப்பட்டார். தாறுமாறாக சரக்கை உள்ளே அனுப்பியபடி இருந்த அவர் ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்தார். போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சத்தமாக சிரித்தபடி அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்.

திடீரென, பார்ட்டிக்கு வந்திருந்த ஒரு டிவி நிருபரைக் கட்டிப் பிடித்து அவரது வாயோடு வாய் சேர்த்து அழுத்தமாக முத்தம் பதித்து அனைவரையும அலற வைத்தார்.

இதனால் பார்ட்டிக்கு வந்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு ஷெஃபாலியை கஷ்டப்பட்டு அங்கிருந்து அழைத்துச் சென்று ஒரு அறையில் அமர வைத்து 'ஆற' விட்டனர். மேலும் பார்ட்டியையும் சுருக்கமாக முடித்துக் கொண்டனராம்.

'கஸ்தூரி பாய்' இப்படிச் செய்யலாமா, கஷ்டம்தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X