மறுபடியும் ஷோபனா

ஒரு காலத்தில் ஓஹோவென இருந்தவர் ஷோபனா. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து படு பிசியாக இருந்தவர். மார்க்கெட் டல் ஆகவே அப்படியே நடனத்தில் மூழ்கிப் போய் விட்டார்.
நடன நிகழ்ச்சிகள் நடத்துவதிலும், நடன வகுப்புகளை நடத்துவதிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் ஷோபனா. சுத்தமாக சினிமா பக்கமே திரும்பாமல் இருந்து வந்த ஷோபனாவை, அவரது தோழி ரேவதிதான் சில ஆண்டுகளுக்கு முன்பு மறுபடியும் நடிப்புக்கு இழுத்து வந்தார்.
ஆனாலும் தொடர்ந்து நடிக்கவில்லை ஷோபனா. இடையில் சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.
சமீபத்தில் குழப்பங்களிலிருந்து மீண்ட ஷோபனா, தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் காம்பியராக பணியாற்றினார்.
இந்த நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ஷோபனா. மலையாளத்தில் உருவாகும் முசாஃபிர் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் ஷோபனா. இப்படத்தை முழுக்க முழுக்க துபாயில் வைத்து ஷூட் செய்கின்றனர்.
ஷோபனாவுக்கு நல்வரவு!


Click it and Unblock the Notifications











