தீபா மேத்தா படத்தில் ஷ்ரியா!

By Staff

Shreya
சர்வதேச இயக்குநர் தீபா மேத்தா இயக்கும் புதிய படத்தில் ஷ்ரியா நடிக்கிறார்.

வடிவேலுவுடன் நடித்ததால் தான் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை என்று ஷ்ரியா பெருமைப்படும் படியாக அவரது கிராக்கி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது - இங்கல்ல இந்தியில்.

புகழ் பெற்ற இயக்குநர் தீபா மேத்தா அடுத்து இயக்கவுள்ள வாட்ஸ் குக்கிங்? என்ற படத்தில் நடிக்கவுள்ளார் ஷ்ரியா.

ஏற்கனவே இந்தியில் மகேஷ் பட் இயக்கத்தில் ஆவாராபன் படத்தில் நடித்திருக்கிறார் ஷ்ரியா. இப்போது தீபா மேத்தாவின் படம் கிடைத்துள்ளதால் சந்தோஷத்தின் உச்சிக்குப் போயுள்ளார்.

வாட்ஸ் குக்கிங் படத்தை தீபா மேத்தாவும், பி.ஆர்.பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

சர்வதேச படம் ஒன்றில் ஷ்ரியா நடிப்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே, அசோக் அமிர்தராஜின் அதர் என்ட் ஆப் தி லைப் படத்தில் நடிக்கிறார் ஷ்ரியா. இப்படத்தை ஜிம்மி டாட்சன் இயக்குகிறார். ஜெஸ்ஸி மெட்கால்ப் நாயகனாக நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

வாட்ஸ் குக்கிங் படத்தில் ஷ்ரியாவுக்கு முக்கியமான கேரக்டராம். சீமா பிஸ்வாஸ், லிஸா ரே ஆகிய ஹெவிவெயிட்களும் படத்தில் உள்ளனர். டெல்லியில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறதாம்.

இந்தப் படம் குறித்து ஷ்ரியாவிடம் கேட்டபோது, தீபா மேத்தா என்னைத் தொடர்பு கொண்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனக்குப் புதிய அனுபவமாக இருக்கும் என்றார்.

தற்போது இந்தியில் ஷ்ரியா படு பிசியாக இருக்கிறார். சங்கீத் சிவனின் ஏக் (பாபி தியோல், நானா படேகர் நடிக்கிறார்கள்), அபூர்வா லகியாவின் மிஷன் இஸ்தான்புல் (அபிஷேக் பச்சன், சுனில் ஷெட்டி, விவேக் ஓபராய், சயீத் கான் நடிக்கின்றனர்) ஆகிய படங்கள் ஷ்ரியா வசம் உள்ளது.

தமிழில் விக்ரமுடன் கந்தசாமி மற்றும் தனுஷுடன் புதிய படம் ஆகியவை மட்டுமே ஷ்ரியாவிடம் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X