தொழிலதிபரா, சினிமாக்காரரா... சினேகாவின் சாய்ஸ்!

சினேகாவுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சினேகா, தனது பிறந்த நாள் 'செய்தி'யாக ரசிகர்களுக்குக் கூறியதாவது:
அதிகப் படங்களில் இப்போது நடிப்பது நான்தான் என்பதற்காக, நானே நம்பர் ஒன் நடிகை என சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு இந்த நம்பர்களில் நம்பிக்கை இல்லை.
இன்னொன்று பணத்துக்காக என் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் குத்துப் பாடல்களில் நடிக்க மாட்டேன். ஒவ்வொரு பூக்களுமே மாதிரி கருத்துள்ள பாடல்களில் தோன்றவே விருப்பம்.
வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீமேக்கில் நான் நடிப்பது உண்மைதான். ஆனால் அதில் முழுக்க முழுக்க காக்கி யூனிபார்ம் மட்டுமே அணியாமல், அவ்வப்போது பாவாடை தாவணி காஸ்ட்யூமிலும் வருகிறேன்.
என் கேரியரில் எப்படியாவது தேசிய விருது பெற வேண்டும் என்பதே விருப்பம். அதற்காக கடுமையாக உழைக்கத் தயார்.
வைஜெயந்தி ஐபிஎஸ் படத்துக்காக சிறப்பு பயிற்சி பெற உள்ளேன். ஆக்ஷன் வேடத்தில் நடிப்பதால் அரசியலுக்கு வருவேன் என்பது அர்த்தமில்லை.
எல்லோரும் என் திருமணம் பற்றிக் கேட்கிறார்கள். அதைப் பற்றி இன்னும் நான் யோசிக்கவே இல்லை. என் கணவர் தொழிலதிபரா சினிமாக்காரரா என்பதை இப்போதே எப்படிக் கூற முடியும், என்றார் சினேகா.
தனது பிறந்த நாளையொட்டி கீழ்பாக்கத்தில் உள்ள பாலவிஹார் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அரிசி, பருப்பு மூட்டைகளை வழங்கினார் சினேகா.


Click it and Unblock the Notifications











