ஸ்னேகா-சிம்பு 'கன்பர்ம்டு'!

காளை படத்தில் சிம்புவின் அத்தை கேரக்டரில் நடிக்க முதலில் பேசப்பட்டவர் ஸ்னேகா. ஆனால் அவர் மறுக்கவே, சங்கீதாவை நடிக்க வைத்தார் சிம்பு. இதுதொடர்பாக சிம்புவுக்கும், ஸ்னேகாவுக்கும் இடையே லேசான லடாயும் ஏற்பட்டு சரியானது.
இந் நிலையில் சிலம்பாட்டம் படத்தில் ஸ்னேகா சிம்புவுடன் இணைகிறார்.
இந்தப் படத்தில் சனா கான் எனும் மும்பை மாடல் நாயகியாக ஏற்கெனவே நடித்து வருகிறார். தற்போது கதாநாயகிக்கு இணையான முக்கிய வேடத்தில் ஸ்னேகா நடிக்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறாராம் ஸ்னேகா.
இந்தப் படத்தில் கோயிலில் பூசாரியாக வேலை பார்க்கும் அப்பாவி இளைஞன் வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.
சரவணன் இயக்கும் இப்படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு மதி. லட்சுமி மூவி மேக்கர்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நேற்று கும்பகோணத்தில் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











