Just In
- 27 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 1 hr ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Sports
இமாலய வெற்றி... பாராட்டுக்களால் திக்குமுக்காடும் இந்திய வீரர்கள்... தமிழ் பிரபலங்கள் பாராட்டு!
- Education
ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
91,000 பேருக்கு வேலை.. அசத்தும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ.. மாணவர்களுக்கு ஜாக்பாட்!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுனேனாவுக்கு பாவாடை, தாவணியால் வந்த பிரச்சனை
வம்சம் படத்தில் கருணாநிதி குடும்பத்து வாரிசான அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து நடித்த சுனேனாவை அதற்குப் பிறகு ஆளையே காணோம். அவரைத் தேடிக் கண்டுபிடித்து காரணம் கேட்டதற்கு எல்லாம் பாவாடை, தாவணியால் வந்த இடைவெளி என்றார். என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே, கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது,
வம்சம் படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கிராமத்துப் பெண்ணாக வந்தேன். அந்த படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த 4,5 படங்களில் பாவாடை தாவணி அணியும் கிராமத்துப் பெண் கதாபாத்திரமாகத் தான் இருந்தது.
இது என்னடா ஒரே பாவாடை, தாவணியாக இருக்கிறது என்ற பயமே வந்துவிட்டது. அதனால் தான் மாறுதல் வேண்டி வம்சம் படத்திற்குப் பிறகு சிறிது இடைவெளிவிட்டேன். அதனால் தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. சமரன் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கிறேன். அதில் த்ரிஷாவும் உள்ளார்.
மேலும் ராசு மதுரவனின் படத்திலும் நடிக்கிறேன். இந்த 2 படங்களிலுமே எனக்கு கிராமத்துப் பெண் கதாபாத்திரம் இல்லை என்பது சந்தோஷமான விஷயம். மாடர்ன் பெண்ணாக வருகிறேன். சமரன் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும்.
நான் நடித்துள்ள 'திருத்தணி", 'கதிர்வேல்" ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன என்றார்.