ராவணாவுக்காக இசை கற்கும் ஐஸ்!

By Staff

Aishwarya Rai and Abhishek
இசையரசி ஆகும் முயற்சிகளில் மும்முராக இறங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். எப்போது அரங்கேற்றம் என்று கேட்டுவிடாதீர்கள். இந்த இசை முயற்சி அரங்கேற்றத்துக்காக அல்ல.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட படமான ராவணாவுக்காகத்தான்.

இப் படத்தில் பிராமணப் பெண்ணாக நடிக்கிறார், ஐஸ்வர்யா. படத்தில் கர்நாடக இசையில் வல்லமை பெற்ற சீதா வேடம் அவருக்கு. சும்மா இசை தெரிந்தவர் போல பாவனை செய்யாமல், கர்நாடக இசை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஐஸ்வர்யாவிடம் கூறியுள்ளார் மணிரத்னம். அப்போதுதான் அதற்கேற்ற உடல் மொழி சரியாக வரும் என்பதால் இந்த யோசனை.

இதையடுத்து கர்நாடக இசைக் கலைஞர் ஒருவர் மூலம் முறையாக கற்று வருகிறார் ஐஸ்வர்யா. இதற்கென படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே இடம் ஒதுக்கப்பட்டு விட்டது.

அவர் இசை கற்க ஆரம்பித்த இரு தினங்களிலேயே மாமனார் அமிதாப் பச்சன் உடல் நலம் குன்றியதால் உடனடியாக மும்பைக்குப் பறந்துவிட்டார். அமிதாப் வீடு திரும்பி உடல் நலம் தேறிய பின்பே அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X