சினிமாவில் பிசி - ரியாலிட்டி ஷோக்களுக்கு ஐஸ்வர்யா டாடா

சமீபத்தில், சோனி டிவியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் பிரீமியர் லீக் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க வருமாறு ஐஸ்வர்யா ராய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் நிறைய சம்பளம் கேட்டதாக கிசுகிசு கிளம்பியது. தற்போது இந்த நிகழ்ச்சியை ராணி முகர்ஜியும், டான்ஸ் மாஸ்டர் ஷியாமக் தவாரும் இணைந்து வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் பி.ஆர்.ஓ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்க வருமாறு ஐஸ்வர்யா ராய்க்கு நிறைய அழைப்புகள் வருகின்றன. ஆனால் அவர் தற்போது நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நேரமோ போதாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் வருகிற அழைப்புகளை பரிசீலிக்கக் கூட அவருக்கு நேரம் இல்லாத நிலை.
மற்றபடி அவர் கூடுதல் சம்பளம் கேட்கிறார் என்பதில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் தற்போது குஷாரிஸ், ஆக்ஷன் ரீப்ளே, ராவண் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராவண் படம் ஏகப்பட்ட சிக்கலில் மாட்டி தொக்கி நிற்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











