'கண்டபடி சாப்பிடாதீங்க!'-அமலா பால் அட்வைஸ்!

By Shankar

பெண்கள் கண்டபடி சாப்பிட்டால் குண்டாகி, பார்க்கவே சகிக்காது. ஸ்லிம்மாக இருக்க அளவோடு சாப்பிடணும், ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கணும், என்கிறார் கேரளத்து வரவான அமலா பால்.

சிந்து சமவெளி, மைனா பட கதாநாயகி அமலா பால் இன்று கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெண்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அது. இதில் கலந்து கொண்ட பெண்கள் பெரும்பாலும் கேட்டது அமலா இப்படி ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம்தான்.

அதற்கு அவர் கூறிய பதில் இது (கேரள ஆயுர்வேதத்துக்கு விளம்பரமா என்பதை அம்மணியிடம்தான் கேட்க வேண்டும்!)

"கேரளத்திலிருந்து வந்த எனக்கு தமிழ் பட உலகில் முக்கிய இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே தமிழில் நான் நடித்த 2 படம் வெற்றி பெற்றுள்ளது. மைனா படம் எனக்கு பேரும், புகழும் பெற்று தந்தது. தற்போது மதராசப்பட்டினம் டைரக்டர் விஜய் இயக்கும் பிதா, முப்பொழுதும் உன் ஞாபகங்கள், லிங்குசாமி இயக்கும் படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மலையாளத்தில் நான் நடித்த படம் விரைவில் வெளி வர உள்ளது. பெண்கள் தங்கள் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் பேணி காப்பது மிகமுக்கியம். கண்ட கண்ட பொருட்களை சாப்பிடக் கூடாது. உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை சேர்த்து கொண்டால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம். குண்டான பெண்கள் ஆங்கில மருத்துவத்துக்குப் போகாமல், ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X