சென்னைக்கு இடம் பெயர்ந்த அனுஷ்கா!

By Staff

Anushka
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளார் அனுஷ்கா- தெலுங்கானா பிரச்னைக்கு பயந்து அல்ல. வேட்டைக்காரனுக்கு பிறகு தமிழ்ப் பட வாய்ப்புகள் வந்து வாசல் கதவை தட்டுவதற்கு வசதியாக வீட்டை சென்னைக்கு மாற்றி விட்டார்.

அனுஷ்கா இந்த ஆண்டில் தெலுங்கு, தமிழ் இரண்டிலும் தலா ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தாலும், வேட்டைக்காரன் ரிலீசுக்கு பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்ட வந்தே தீருவோம் என்ற நம்பி்க்கையில் உள்ளாராம்.

ஏற்கனவே ரெண்டு படத்தில் அறிமுகமானாலும் எதிர்பார்த்த படி வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. இதனால்தான் தெலுங்குக்குப் போனார். தற்போது தனக்கு கிடைத்துள்ள ரீ-என்ட்ரி மூலம் தமிழ் சினிமாவில் தன்னை நிரூபி்த்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

எதிர்பார்த்தபடியே பல வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறதாம். சூர்யா, ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு தேவா போன்றவர்களின் 'ஆப்ஷன் லிஸ்டில்' முதலிடம் இப்போது அனுஷ்காவுக்கு தான்.

வேட்டைக்காரனில் இவருக்கு, மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த 'ஐ.டி எம்ப்ளாயி' வேடம் மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறதாம்.

குறிப்பாக, படத்தில் விஜயும் இவரும் அடிக்கடி எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொள்வது போன்ற காட்சிகளில் 'கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், ஹிஸ்டரி, பயாலஜி, ஜியாகிரபி' என எல்லாமே இருவருக்கும் நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறதாம்.

ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகி இருப்பதும், சினிமாக்காரர்களின் ரியாக்ஷனும் மிகவும் பாசிட்டிவாக இருப்பதாக தன் நண்பர்களிடம் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்து கோடம்பாக்கத்தில் அடுத்து தனது வேட்டைதான் என்பதை உறுதி செய்து விட்டதால்தான் சென்னையில் வீடு போட்டு ரவுண்டு கட்டி அடிக்க ஆயத்தமாகி வருகிறாராம் அனுஷ்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X