பாலிவுட்டை கலக்க அடுத்த தங்கச்சி 'ரெடி'
அக்காவை தொடர்ந்து தங்கையும் சினிமாவுக்கு வருவதற்கு ஆயிஷா தாகியாவின் குடும்பம் விதிவிலக்காக அமையவில்லை. அடுத்த ஆண்டு அவரது தங்கை 21 வயதான நடாஷாவும் நடிக்கவிருக்கிறார்.
நடாஷாவுக்கு, அக்கா கரிஷ்மா கபூரை மிஞ்சி பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் கரீனா கபூர் போல் வரவேற்பு கிடைக்க வேண்டும் என ஆயிஷா விரும்புகிறார்.
கஜோல் தங்கை தனிஷா, ஷில்பா ஷெட்டி தங்கை ஷமிதா ஷெட்டி போல் அக்காவை விட பின்தங்கிய தங்கையாகிவிட கூடாது என்பதில் ஆயிஷா கவனமாக இருக்கிறார்.
இது குறித்து ஆயிஷா கூறுகையில்,
நடாஷாவின் வரவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருக்கு பாலிவுட்டில் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன்.
அவர் இதற்காக தன்னை சிறப்பாக தயார் செய்து வருகிறார். நான் என் சினிமா வாழ்க்கையை துவக்கிய போது எனக்கு திரைத்துறை குறித்து எந்த ஐடியாவும் இல்லை. இப்போது என் வழிகாட்டல் இருப்பது நடாஷாவுக்கு உதவியுள்ளது.
நான் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்துவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் சினிமாவோ.. தெரியாது. நடிப்புக்கிடையே கோவாவில் ஒரு ஹோட்டல் கட்டியுள்ளேன். இந்த சீசன் முதல் அது செயல்பட துவங்கும் என்கிறார்.


Click it and Unblock the Notifications











