ஆயிஷாவுக்கு கல்யாணம்

பாலிவுட் ஹாட் ஸ்டார்களில் ஒருவர் ஆயிஷா டாக்கியா. போக்கிரி இந்திப் படத்தில் சல்மான் கான் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர ரேவதி இயக்கும் ஃபிரக் தும் மில் கயே படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட நாட்களாக காதலித்து வரும் காதலர் பர்ஹான் ஆஸ்மியை விரைவில் மணக்கவுள்ளார் ஆயிஷா.
பர்ஹான் ஆஸ்மி, சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அபு ஆஸ்மியின் மகன் ஆவார். ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார் பர்ஹான்.
கடந்த டிசம்பர் மாதமே திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் அப்போது நடந்ததால் அப்செட் ஆன ஆயிஷா, திருமணத்தை தள்ளி வைத்து விட்டார்.
இந்த நிலையில் அடுத்த மாத வாக்கில் இருவரது திருமணமும் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. மும்பையில்தான் திருமணம் நடக்குமாம். அதேசமயம், ஆடம்பரமாக இல்லாமல், சிம்பிளாக ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டாராம் ஆயிஷா.
இரு வீட்டார், உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை மட்டுமே திருமணத்தை அழைக்கப் போகிறார்களாம்.
கல்யாணத்தை முடித்து விட்டு ரேவதியின் படத்தை முடித்துக் கொடுப்பார் ஆயிஷா என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











