காங்கிரஸுடன் கூட்டு! - சந்திரபாபு நாயுடு மீது ரோஜா தாக்கு

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், முன்னாள் எம்பியுமான ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர. காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இதன் முக்கிய நிர்வாகிகளுள் நடிகை ரோஜாவும் ஒருவர்.
தினமும் ஒரு பரபரப்பைக் கிளப்புவதுதான் இப்போது அவரது முதன்மைப் பணி். அந்த வகையில் நகரியில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கியுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆந்திர மக்கள் காங்கிரஸ் கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. எந்தவித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. மருத்துவம், பொறியியல் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு அரசு கட்டணம் செலுத்த தயக்கம் காட்டுகிறது.
இந்த நடவடிக்கையால் மக்களுக்கு அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டிக்கு அடுத்து மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிதான்.
சந்திரபாபு நாயுடு தற்போது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அரசு கவிழ்ந்து விடும். ஆனால் அவர் அவ்வாறு செய்யமாட்டார். ஏனென்றால் அவர் காங்கிரசுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறார். மேலும், காங்கிரசுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்," என்றார்.


Click it and Unblock the Notifications











