ஷாமுக்கு இலியானா ஓ.கே.

இடுப்பசைவாலும், அழகிய நடனத்தாலும் தெலுங்கு ரசிகர்களின் ஏகோபித்த கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இலியானா.
தெலுங்கு ரசிகர்களை லயிக்க வைத்து வரும் இலியானாவை தமிழுக்கும் கொண்டு வர கடும் முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால் யாருக்கும் இசைந்து கொடுக்கவில்லை இலியானா.
விஜய் முதல் அத்தனை ஸ்டார்களுக்கும் ஜோடியாக்கி விட இலியானாவை கடுமையாக முயன்றும் அவர் ஒத்துவரவில்லை.
ஆனால் தற்போது ஷாமுடன் ஜோடியாக நடிக்க பச்சைக் கொடி காட்டி தமிழ் ஹீரோக்கள் வயிற்றில் பொறுமலை ஏற்படுத்தியுள்ளார் இலியானா.
சுரேந்தர் என்பவர் தெலுங்கிலும், தமிழிலும் தயாரிக்கும் படத்தில்தான் இலியானா, ஷாமுடன் இணைகிறார். அதாவது தமிழ்ப் பதிப்பில் இலியானாவுக்கு ஜோடியாக வருகிறார் ஷாம்.
நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் இலியானா நடிக்கவிருப்பது இது 2வது முறை. முதல் படம் கேடி. அதில் ரவிகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்போது ஷாமுடன் இணைகிறார்.
இலியானாவுக்கு தமிழ் மீது ஏன்தான் இத்தனை கோபமோ?


Click it and Unblock the Notifications











